சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த பல்லாவரம், இன்று தாம்பரம் மாநகராட்சியின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. சென்னைக்குள் இருந்தாலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் தான் வருகிறது. இங்குள்ள அரசு நிலங்கள் பராமரிப்பு, நீர் நிலைகள்...
டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல் சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஜனநாயக திருவிழா என வர்ணிக்கப்படும் இந்தியாவின் லோக்சபா தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. காலை 7 மணிக்கு லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்து...
டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாஜக தேர்தல் அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் ஆகியோர்களை குறி வைத்து இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் பல முக்கிய திட்டங்கள் இதில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல்: அதன்படி முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட...
சென்னை: ஆட்சியில் இருந்தபோது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, இப்போது நீலிக்கண்ணீர் வடித்து கபட நாடகம் போடுகிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது, ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்...
திருச்சி; திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கே வந்த கொடி ஒன்றை பார்த்து எடப்பாடி பழனிசாமி கோபமாக ரியாக்சன் கொடுத்தது கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று இவர்கள் எல்லோரும் மொத்தமாக எடப்பாடி உடன் மேடையில் ஏற்றப்பட்டனர். திருச்சியில் நடந்த கூட்டத்தில் இவர்கள் அறிவிக்கப்பட்டனர். 1.வடசென்னை – ராயபுரம் மனோ 2.தென்சென்னை – ஜெயவர்த்தன் 3.காஞ்சிபுரம் – ராஜசேகர் 4.அரக்கோணம் – ஏ.எல்.விஜயன் 5.கிருஷ்ணகிரி...
ஜெய்ப்பூர்: வரும் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் மீண்டும் பாஜகவின் கை தான் ஓங்கி இருக்கும் எனவும், காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 69 தொகுதிகளில்...
சென்னை: இலவச ரேஷன் பொருட்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.நியாய விலைக்கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதையடுத்து, பொதுமக்களும், ரேஷன்...
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது. ...
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ,1,368 கோடி நிதி அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது என்று கடந்த சில தினங்கள் முன்னதாக அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருந்தது. எனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க் கிழமை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வங்கிய கெடு வித்திருந்தது. அதன்படி...
சென்னை: பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான “புள்ளி” ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்து வருகிறாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். . கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து...