28 in Thiruvananthapuram

Tamil News

மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறு.. கைவிடகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. இது தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஅமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பினனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர்...

தேம்பி தேம்பி அழும் முகேஷ் அம்பானி.. பங்குகள் சரிவு, அரசின் நோட்டீஸ், சொத்து மதிப்பு சரிவு..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டணி நிறுவனங்களான பிபி எக்ஸ்ப்ளோரேஷன் (ஆல்பா) லிமிடெட் மற்றும் NIKO (NECO) லிமிடெட் ஆகியவற்றுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2.81 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 0.80 சதவீதம் சரிந்து 1161.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் கடந்த 6 மாதத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 23.38 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் ரிலையன்ஸ் பங்குகள்...

அந்த 2 தோல்வி.. இந்தியாவை காலி பண்ணிட்டாங்க.. பாகிஸ்தானிடம் தோற்றால் கதையே ஓவர்.. ரசிகர்கள் பதற்றம்!

சென்னை: ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்களிடையே இன்றுவரை பதற்றத்தை கொடுத்துள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் இடைவெளியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்திருப்பதால், இம்முறையும் அப்படி நடக்குமோ என்ற பதற்றத்தில் ரசிகர்கள் உள்ளனர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று மதியம் நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது....

மோடியை வீழ்த்த அமெரிக்கா செய்த பெரிய சதி.. உண்மையை உடைத்த மாஜி அதிகாரி! டிரம்பும் உடந்தையா?

வாஷிங்டன்: 2019ல் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். அப்போது நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தத. இதில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை வீழ்த்தும் வகையில் அவர்களின் பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பணியை அமெரிக்க ஏஜென்சி செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரி மைக் பென்ஸ் பரபரப்பான கதவலை தெரிவித்துள்ளார்.     அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை...

தைப்பூசத் திருவிழா: தமிழ் நிலக் கடவுள் முருகனை போற்றுவோம்! தவெக விஜய் வாழ்த்து

சென்னை: தைப்பூசத் திருநாளில் தமிழ் கடவுள் முருகனை போற்றுவோம் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தைப்பூசத் திருவிழா இன்று உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் சேர்ந்து வருவதுதான் தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் வேண்டியதை வேண்டியபடியே...

கச்சத்தீவு: மார்ச் 14,15-ல் தேவாலய திருவிழா- 4,000 இந்திய பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி!

டெல்லி: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரத்துக்கு மிக அருகே உள்ளது கச்சத்தீவு. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனால் கச்சத்தீவில்...

தலைநகரம் ஹீரோயின் இப்படி பாட்டி போல மாறிட்டாங்களே.. ஓடிடியில் வெளியான போகன்வில்லா விமர்சனம் இதோ

சென்னை: அக்டோபர் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியான மலையாளப்படமான போகன்வில்லா சமீபத்தில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்ட சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு பலரும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோதிர்மயியை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என யோசித்துக் கொண்டே அட தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நம்ம நாய் சேகர் வடிவேலுவின் அழகில் மயங்கி விழுந்தவரா இவர் இப்படி பாட்டி போல மாறிட்டாங்களே என சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர்.  ...

உதயநிதிக்கு பயம்.. கேரவனில் ஒத்திகை பார்த்த விஜய் – ஆதவ் அர்ஜுனா.. கசிந்த தகவலால்.. சிவந்த திமுக

சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர். இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும்...

தடிக்கும் வார்த்தை.. வலுக்கும் மோதல்! நாம் தமிழரை விடாத வருண்குமார்! நேராக உள்துறைக்கே பறந்த புகார்!

சென்னை: சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்பி அருண்குமார் பேசிய பேச்சு, நாம் தமிழர் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக மோதல் விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் வருண்குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் வலுத்திருக்குகிறது. இதற்கிடையே எஸ்பி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின்...

மண்ணில் புதையுண்ட 7 பேரையும் உயிருடன் மீட்க விரைவாக செயல்படுங்க.. எடப்பாடி வைத்த கோரிக்கை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ஒரு வீட்டில் இருந்த 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது....