25 in Thiruvananthapuram

Tamil News

பீகாரில் சூடுபிடித்த தேர்தல் களம்.. தொகுதி பங்கீட்டில் கட்சிகள் மும்முரம்! யார் யாருக்கு எவ்வளவு?

பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 2 நாட்களாக பீகாரில் ஆய்வு மேற்கொண்டிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் பீகார் சட்டப்பேரவைக்கான ஆட்சிக்காலம் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார். பீகாரில் மொத்தம்...

போதும் சாமி என்ன விட்ருங்க.. அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய்! ரஜினி எடுத்த முடிவு.. பிரபலம் நறுக்!

சென்னை: மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் பிரச்சாரத்தை ஆரம்பித்து ஒரு மாதத்துக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தொடர் நெருக்கடிகளால் விஜய் ரஜினியை, அரசியலை விட்டு விலகும் முடிவை எடுப்பார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் எஸ்வி சேகர்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக...

சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளியை தாக்கி கொள்ளை.. தமிழர்கள் இருவருக்கு சிறை!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த இரண்டு தமிழர்கள், பாலியல் தொழிலாளர்கள் இருவரை தாக்கி, கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்திற்காக இருவருக்கும் 5 ஆண்டுகள் ஒரு மாத சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. அரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோர் கடந்த ஏப்ரல் 24 அன்று சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றனர். சிங்கப்பூர் வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, ஒரு அந்நியர் இவர்களை அணுகி பாலியல்...

பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 22 பேர் பலி, பலர் காயம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கத்திற்கான வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகள்...

ആള് കൂടിയാലൊന്നും വോട്ട് കൂടില്ലെന്ന് കമൽ ഹാസൻ; ഉന്നം വച്ചത് വിജയ്‌യെ തന്നെയോ? അല്ലെങ്കിൽ അനുഭവമോ?

ചെന്നൈ: സൂപ്പർതാരം വിജയുടെ ടിവികെയെ പരോക്ഷമായി സൂചിപ്പിച്ചുകൊണ്ട് റാലികളിൽ ജനക്കൂട്ടം ഒന്നും തന്നെ വോട്ടായി മാറില്ലെന്ന പരാമർശവുമായി നടനും മക്കൾ നീതി മയ്യം നേതാവുമായ കമൽ ഹാസൻ. തമിഴ്‌നാട് നിയമസഭാ തിരഞ്ഞെടുപ്പിന് മാസങ്ങൾ മാത്രം ശേഷിക്കെ, സംസ്ഥാനത്ത് നടക്കുന്ന ടിവികെ രാഷ്ട്രീയ റാലികളിൽ വിജയ് പങ്കെടുക്കുന്ന വേളയിൽ വൻ ജനക്കൂട്ടം ഉണ്ടാവുന്നത് പതിവ് കാഴ്‌ചയായിരുന്നു. അതിനിടയിലാണ് കമലിന്റെ പരാമർശം ഒരു പൊതുസംവാദത്തിൽ സംസാരിക്കവെയാണ് ഇക്കാര്യം തുറന്ന് പറഞ്ഞത്. ‘ആൾക്കൂട്ടം ഒരിക്കലും വോട്ടായി മാറില്ല’ എന്ന് കമൽഹാസൻ അഭിപ്രായപ്പെട്ടു....

H-1B விசா கட்டண உயர்வு.. லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிக்கொட்டிய டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் H-1B விசாவைதான் வைத்திருக்கிறார்கள். இந்த விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் தற்போது உயர்த்தியிருக்கிறார். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் H-1B விசாவை வைத்திருக்கும் 3.5 லட்சம் இந்தியர்களையும், புதியதாக அமெரிக்காவுக்கு வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கும். H-1B விசா என்பது தற்காலிக அமெரிக்கா வேலை விசா ஆகும். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்த விசா முறை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்...

இந்தியா மீதான பரஸ்பர வரியை ரத்து செய்யும் அமெரிக்கா.. மொத்த வரியும் 15% குறையுமாம்! முக்கிய தகவல்

டெல்லி: இப்போது இந்தியா மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தியா மீதான வரியை அமெரிக்கா சீக்கிரமே ரத்து செய்யலாம் என்றும் ஒட்டுமொத்த வரி 15%ஆக குறைக்கப்படலாம் என்றும் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அப்படித் தான் இந்தியா மீது அவர்...

பவன் கல்யாண் இப்படி எல்லாம் பண்ணது இல்லையே.. உடனே இந்த 8 விஷயத்தை விஜய் செய்யணும்.. இல்லைன்னா சிக்கல்

‏சென்னை: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். சமீப காலங்களில் இந்திய அரசியலில் ஒரே வெற்றிகரமான நடிகர் என்றால் அது பவன் கல்யாண் மட்டும்தான். கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்கள் அரசியலில் தங்கள் உயரத்தை அடைய முடியவில்லை. இப்போது நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் மூலம் விஜய் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர் அரசியலில் சில தவறுகளையும் செய்து வருகிறார்....

வக்பு சட்டத்திருத்த பிரிவுகளுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள்,...

ஒரே ஒரு ஹேஷ்டேக்.. ஒட்டுமொத்தமாய் மாறிய தலையெழுத்து! இயக்குனர் ஷங்கர் சொன்னதை செய்து காட்டிய GEN

‍சென்னை: திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் ஒரே ஒரு #ஹேஷ்டேக் மூலம் புரட்சி ஏற்படும் எனக் கூறியிருந்ததை கடுமையாக ட்ரோல் செய்தனர் நெட்டிசன்கள். ஆனால் அதேபோல ஒரு ஹேஷ்டேக்கை வைத்து நேபாளத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்வியில் ஊழல், கருப்பு பண ஒழிப்பு, என ஷங்கர் சொன்னதெல்லாம் பிறகு நடந்திருக்கிறது என அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர்...