27 in Thiruvananthapuram
TV Next News > News > Tamil News > ரேஷனில் குஷி.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி..இலவச ரேஷன் திட்டத்தில் புது அதிரடி.. இதுதான் மோடி

ரேஷனில் குஷி.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி..இலவச ரேஷன் திட்டத்தில் புது அதிரடி.. இதுதான் மோடி

Posted by: TV Next March 19, 2024 No Comments

சென்னை: இலவச ரேஷன் பொருட்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.நியாய விலைக்கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது..

இதையடுத்து, பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர். ஆனால், இப்படி இணைக்கப்பட்ட பிறகுதான், பல மோசடிகள் சில மாதங்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்திருந்தன.உத்தரபிரதேசம்: நிறைய பேர், வேறொரு மாநிலத்தின் வசிப்பிட சான்றிதழை தானாகவே உருவாக்கி ரேஷன் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கி வந்திருக்கிறார்களாம். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் இப்படி மொத்தம் 9500 பேர் சிக்கியிருந்தார்கள். இருப்பிட சான்றிதழ்களை தயார் செய்து, அதை வைத்து, ரேஷன் கார்டுகளை வாங்கியிருக்கிறார்கள்..

 


பஞ்சாப் மாநிலத்திலும், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்துடன் தொடர்புடைய 40,000 குடும்பங்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.. இது அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அதிகாரிகள் மீது புகார்கள் குவிந்தன.

பிரதமர் மோடி: இறுதியில் இலவச ரேஷன் திட்டத்தினால் யாருமே பாதிக்கப்படக்கூடாது என்றும், அனைவருக்குமே ரேஷன் பொருட்கள் கிடைப்பது என்பது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில். பிரதமர் மோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்களுக்கான திட்டத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வரவேற்பு: அந்த அளவுக்கு, கடந்த 2020ம் ஆண்டு துவங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. இதன்மூலம், ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

 

அதனால், முதல் 3 மாதங்களை மட்டும் இலக்காக வைத்து துவங்கப்பட்ட இத்திட்டத்திற்கு தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு: அதாவது, இந்த திட்டத்தை 2028 ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி இப்போது அறிவித்திருக்கிறார்.. இந்த திட்டத்திற்கென ரூ.11.8 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.. மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் சுமார் 81 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுவார்கள்.. அதிலும், 75 சதவீத கிராமப்புற மக்களும், 50 சதவீத நகர்ப்புற மக்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.