நியூயார்க்: அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த “பலான லிஸ்டில்” சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட்? அந்த நாட்டையே இந்த லிஸ்ட் உலுக்க என்ன காரணம்? ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி...