சென்னை: செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைகிறார்.. 10 மணிக்கு இந்த இணைப்பு விழா நடக்கிறது.. மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யுடன் இணைவது அதிமுகவுக்கு எந்தவகையான சிக்கலை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளதுஅதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், பிரிந்தவர்களை கட்சியில் இணைக்க போவதாகவும் சொல்லிவிட்டு போன அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணையபோவதாக செய்திகள் கடந்த 3 நாட்களாகவே பரபரத்து வந்தது.. நேற்றைய தினம் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா...
டேராடூன்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் உஷார் நிலையில் இருக்கும் சூழலில், மீண்டும் அதிகளவில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள அரசுப் பள்ளியில் சுமார் 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.டெல்லியில் இம்மாத தொடக்கத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுக்க போலீசார் உஷார் நிலையில், இதற்கிடையே மீண்டும் வட இந்தியாவில் அதிகளவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்...
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) செவ்வாய்க்கிழமை மனு அளித்தது. இந்த சின்னம் விவகாரத்தில் “டெல்லி” விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்....
திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆவணங்களை வைத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிபாடு நடத்தினார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டம் நடந்தது. அப்போது அங்கு விஜய்யை பார்க்க அதிகளவு கூட்டம் கூடியது. இதனால் நெரிசல் ஏற்பட்ட நிலையில் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100- க்கும் மேற்பட்டோர்...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பள்ளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர், கிராம வரைபடம் உள்ளிட்ட சில ஆவணங்களின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க கோரியிருந்தார். ஆனால் வருவாய் துறை ஆவணங்களை வழங்கவில்லை.. இந்நிலையில் வருவாய்த்துறை ஆவணங்கள் மாயமானது குறித்து கேள்வி எழுப்பிய மாநில தகவல் ஆணையம் ஆவணங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டியது வருவாய்த்துறையின் கடமை என கண்டனம் தெரிவித்துள்ளது. கிராம வரைபடம் மற்றும் அந்த காலத்து நில ஆவணங்கள்...
செங்கல்பட்டு: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன், “நாளை திமுக கூட்டணி வேண்டாம் என்று நான் அறிக்கை விட்டால் ஆஹா.. ஓஹோ என்று மகிழ்ச்சியடைவார்கள். ஏன் இன்னொரு தீபாவளி பண்டிகை போல கொண்டாடுவார்கள்.” என்று வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடி எதிரியாக இருப்பது விசிக...
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் கையெழுத்தானது. அப்போது பேசிய டிரம்ப், “இந்தியா மிகவும் சிறந்த நாடு. எனது மிகச் சிறந்த நண்பர் உச்ச பொறுப்பில் இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் அற்புதமான பணிகளை செய்கிறார்” என்று பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டே டிரம்ப் இவ்வாறு பேசினார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான...
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவருடைய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் விளக்கியுள்ளார். மேலும் விஜய்யுடன் தான் போனில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது சிறு வயது நண்பனான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே...
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவியை கைது செய்தனர். இதற்கு உதவி செய்ததாக மாணவியின் பெற்றோர்களையும் கைது செய்தனர். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள்...
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்று வெறும் 14 மணி நேரத்தில் அந்நாட்டுப் பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா செய்தது. அங்கு நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன.. இது உலகளவில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் ராஜினாமா செய்துள்ளார். அவருடைய புதிய...