28 in Thiruvananthapuram

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் ஸ்ரீ.. 37 வயதிலேயே இப்படி ஒரு நிலைமையா?

Posted by: TV Next April 12, 2025 No Comments

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பொதுவாக திரைப்படங்கள், சீரியலில் நடித்த ஒரு சிலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறி விடுகிறார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் விடுகிறார்கள். அவர்களை பார்த்ததும் இவர்களா அவர்கள் என்று ரசிகர்களே குழப்பம் அடைகிறார்கள். அதுபோலத்தான் நடிகர் ஸ்ரீயும் இப்போது மாறி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் ஸ்ரீராம் கேரக்டர் மூலம் பிரபலமான ஸ்ரீக்கு அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தில் இவர்தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கனா காணும் காலங்களில் இருந்ததற்கும் வழக்கு எண் 18 திரைப்படத்தில் இருப்பதற்கும் அதிக வித்தியாசம் காட்டப்பட்டது. தெருவில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் கேரக்டரில் அப்படியே பொருந்தி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது.

அதற்கு பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் சந்துரு கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து மாநகரம் இறுகப்பற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இறுகப்பற்று திரைப்படம் கடந்த 2023 இல வெளிவந்தது. ஆனால் இப்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்

அது போல கனா காணும் காலங்கள் சீரியலில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்கு நாட்களில் நிகழ்ச்சியில் இருந்து தனிபட்ட காரணத்தால் விலகி இருந்தார். சில வருடங்களாக இவரை காணாமல் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு எதனால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இவருடைய சோசியல் மீடியா பக்கங்களையும் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதில் நீண்ட தலை முடியுடனும் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக மாறி இருக்கிறார்.

அதிலும் என்ற ஐடியில் ஸ்ரீ அரைகுறை உடையோடு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெற்று இருக்கிறது. அதுபோல ஒரே வீட்டிற்குள் இருந்தது போலவே அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீயின் அதிகமான புகைப்படங்கள் இருக்கிறது. அதுபோல அந்த பதிவுகளில் விரத்தியான கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இந்த சினிமாவில் அழகாக இருப்பவர்களை அசிங்கமாகவும், அசிங்கமாக இருப்பவர்களை அழகாகவும் காட்டுவார்கள் என்பது போன்று கூறி இருக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியலில் கலக்கலான பிளேபாய் கேரக்டரில் நடித்த ஸ்ரீ அதற்குப் பிறகு வழக்கு எண் 18, வில் அம்பு போன்ற திரைப்படத்தில் தன்னுடைய உண்மையான நிறத்தை மாற்றி அழுக்காக நடிக்க வைத்தது வருத்தம் என்பது போன்று சில பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார்

அதுபோல கடைசியாக சில பதிவுகளில் நடிகர் ஸ்ரீ லேடி பாய் என்று குறிப்பிட்டு போஸ்ட் போட்டிருக்கிறது. சில இளைஞர்கள் தாய்லாந்து போய் சில லேடி பாயாக மாறி இருக்கிறார்கள். அதுபோல ஸ்ரீயும் மாறிவிட்டாரா? அதனால் தான் இப்படி எல்லாம் போஸ்ட் போட்டு இருக்கிறாரா என்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் இது நடிகர் ஸ்ரீ இன் சோசியல் மீடியா அக்கவுண்ட் தானா? அல்லது அவருடைய பெயர் மற்றும் புகைப்படங்களை வைத்து வேறு யாரேனும் இதுபோல போஸ்டர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்களா என்ற குழப்பங்களும் கேள்விகளும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் ஒரு காலத்தில் இவருடைய நடிப்பு பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கும் அதிலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும் ஸ்ரீ இப்போது பார்ப்பதற்கே பரிதாபமாக மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருவேளை இது நடிகர் ஸ்ரீயின் உண்மையான சோசியல் மீடியா அக்கவுண்டாக இருந்தால் அவருக்கு சரியான மனரீதியான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. காரணம் அந்த சோசியல் மீடியா பக்கத்தில் சில வருடங்களாக போடப்பட்ட பதிவுகளில் அதிகமாக விரக்தியின் உச்சத்தில் போடப்பட்ட பதிவுகள் போலவே இருக்கிறது. 37 வயதில் தான் தனியாக இந்த வீட்டில் வசித்து வருவதாக கூறியிருக்கிறார். அதுபோல இந்த புகைப்படங்கள் பற்றி நடிகர் ஸ்ரீ விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.