சென்னை: செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைகிறார்.. 10 மணிக்கு இந்த இணைப்பு விழா நடக்கிறது.. மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யுடன் இணைவது அதிமுகவுக்கு எந்தவகையான சிக்கலை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளதுஅதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், பிரிந்தவர்களை கட்சியில் இணைக்க போவதாகவும் சொல்லிவிட்டு போன
அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணையபோவதாக செய்திகள் கடந்த 3 நாட்களாகவே பரபரத்து வந்தது.. நேற்றைய தினம் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுமே, அதிமுக கொடியை தன்னுடைய காரில் இருந்து இறக்கி விட்டார்.இதற்கு பிறகு திமுக, பாஜக கட்சிகள் செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை கடைசி கட்டமாக நடத்தின.. நேற்று முன்தினமே திமுக மூத்த அமைச்சர்கள் 2 பேர் தொடர்பு கொண்டு செங்கோட்டையனிடம் பேசினார்களாம்..திமுகவுக்கு வந்துவிடுங்கள்,அமைப்பு செயலர், மாவட்டச் செயலர் பதவி தர, முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என்றாராம்.. ஆனால் செங்கோட்டையன் தவெகவில் இணையும் முடிவில் உறுதியக இருப்பதாக அவர்களிடம் சொல்லி விட்டாராம்.
நேற்றைய தினம் சபாநாயகர் அப்பாவு அறைக்கு செங்கோட்டையன் வந்தபோது, அவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசியிருக்கிறார்.. முதல்வர் தரப்பில் சொல்லப்பட்ட முக்கிய தகவலை சொன்னாராம். அப்போதும் செங்கோட்டையன் அமைதியாகவே இருந்தாராம்.பிறகு டெல்லியில் தங்கியிருக்கும் நயினார் நாகேந்திரனும், செங்கோட்டையனுக்கு போனை போட்டு பேசியிருக்கிறார்.. அவசரப்பட வேண்டாம், டெல்லி கிளம்பி வாங்க, பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் என்றாராம்,. அதற்கும் செங்கோட்டையன் மறுப்பு சொல்லி விட்டாராம். இறுதியில் விஜய்யை சந்தித்து பேச, இன்று செங்கோட்டையனுக்கு இணைப்பு விழா உறுதியாகிவிட்டது.செங்கோட்டையனை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரப் பயணத்தை வகுத்து தந்த அனுபவம் கொண்டவர்.. மேலும், கொங்கு மண்டல களத்தில் அவரது செயல்பாடு எப்போதும் அதிமுக தலைமைக்கு திருப்தியை மட்டுமே தந்து வந்திருக்கிறது… அந்தவகையில், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் விஜயுடன் இருந்தால், அது தவெகவுக்கு பலம் சேர்ப்பதுடன், கொங்கு மண்டலத்தின் தவெக வாக்கு வங்கியையும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்றபடி, மற்றொரு தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.. அதாவது ஈரோடு மாவட்டத்தில் தன்னுடைய அடுத்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.. செங்கோட்டையன் இன்று கட்சியில் இணைய உள்ள நிலையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே விஜய்யின் மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக தமிழக அரசியலின் கவனத்தை பெற்று வருகிறது.அதுமட்டுமல்ல, வரும் 30ம் கோபி செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் 2ம் கட்டத்தை துவங்குகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டது
இன்று செங்கோட்டையன் கட்சியில் இணைந்ததுமே, ஈரோடு கூட்டம் பற்றி செங்கோட்டையனிடம் விஜய் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. ஈரோடு மட்டுமல்ல, இனி விஜய்யின் அரசியல் பயணத்தின் திட்டங்களை , செங்கோட்டையனே வகுத்து தரலாம் என்கிறார்கள்..மேலும், தவெகவில் இப்போதைக்கு மூத்த தலைவர்கள் யாரும் இல்லாததால், செங்கோட்டையனுக்கு இரண்டாம் இடம்கூட கிடைக்கலாம்.. அவ்வளவு ஏன்? கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் செங்கோட்டையனே கூட நடத்தலாம் என்கிறார்கள்..
மேற்கூறிய செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு சாத்தியமானால், அது அதிமுகவுக்கு குறிப்பாக ஈரோடு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கிறார்கள். செங்கோட்டையனின் தவெகவின் ஐக்கியத்தை, எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார்? செங்கோட்டையனுடன் சில அதிமுக நிர்வாகிகள் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவர்களை எப்படி தடுத்த நிறுத்த போகிறார்? என்பதெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்
