சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது. இதை வாய்ப்பினை பயன்படுத்தி, ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்தியாவிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டுகள் அவசியமாகின்றன.. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு அவசியம்.
ஆதார் அட்டைகள்: எனினும், பலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டைகளே வைத்திருப்பார்கள்.. இந்த பழைய கார்டினை அப்டேட் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. அந்தவகையில், ஆதார் அட்டையில் உங்களது தகவல்கள் எல்லாமே தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும். இதற்காகவே, உங்களது தகவல்களை புதுப்பித்து வைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆதார் அட்டைகள் எந்தவிதமான பிழைகளுடனும் இருக்கக்கூடாது. பிழைகள் இருந்தாலும், அரசின் உதவியை பெற முடியாது என்பதால், தவறுகளை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். கட்டணம் என்ன: 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க வேண்டுமானால், எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான காலக்கெடு செப்டம்பர் 14ம் தேதியே முடிவடைந்துவிட்டது என்றாலும், இப்போது டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாகவோ அல்லது வேறு முகவரி இருந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஆதாரில் உங்கள் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.. எனவே, ஆதார் கார்டுகளை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை தடுக்க, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆதார் அட்டையை அப்டேட் செய்வது கட்டாயமாகும்.. அதன்மூலம் ஆதார் கார்டு பாதுகாப்பாகவும் இருக்கும், மோசடிகளையும் தடுக்க முடியும். 2 ஆப்ஷன்கள்: ஆதார் கார்டை அப்டேட் செய்ய 2 ஆப்ஷன்கள் உள்ளன.. My Aadhaar வெப்சைட்டிற்குள் நுழைந்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆதார் சேவை மையத்துக்குச் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி பொதுச்சேவை மையத்துக்கு செல்வதாக இருந்தால், பெயர், போட்டோ, செல்போன் நம்பர், முகவரி போன்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே ஆன்லைனில் புதுப்பிப்பதாக இருந்தால், இலவசமாக செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு முடிந்ததும், ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஆதாரை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிக்கப்படும். ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 100 ரூபாயும், மக்கள்தொகை தரவுகளுக்கு 50 ரூபாயும், ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கத்திற்கு 30 ரூபாயும், முகவரியைப் புதுப்பிக்க 25 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 14ம் தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம்.