28 in Thiruvananthapuram
TV Next News > News > News > ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாதா?.. விஷாலுக்கு அந்த தைரியமே இல்லை.. சேகுவேரா விளாசல்!

ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாதா?.. விஷாலுக்கு அந்த தைரியமே இல்லை.. சேகுவேரா விளாசல்!

1 week ago
TV Next
10

சென்னை: மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு உருவானால் மிகப்பெரிய அளவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் எனா சேகுவேரா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

 

சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என அசால்ட்டாக சொல்லப்படும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையான விஷயத்தை நடிகைகள் வெகு காலமாக அனுபவித்து வருகின்றனர் தற்போது மலையாள சினிமாவில் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ள முன்னெடுப்புக் காரணமாக அங்கே மிகப்பெரிய புயல் அடித்து வருகிறது.

 


மோகன்லால் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் எல்லாம் பயந்துக் கொண்டு ராஜினாமா செய்து ஓடிவிட்டனர். ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வரும் விஷாலுக்கு அது பற்றி தெரியாது என்றும் ஏதோ கேள்விப்பட்டேன் என பேசுவதெல்லாம் சுத்த அயோக்கியத்தனம் என சேகுவேரா விளாசியுள்ளார்.

 


ஸ்ரீரெட்டியை தெரியாதா?: ஸ்ரீரெட்டியை நடிகையாக தெரியும். மற்றபடி அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்று விஷால் பேசியிருந்தால் அதுதான் சரியான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், ஸ்ரீரெட்டி யாரென்றே தெரியாது என்றும் அவர் பண்ண லீலைகள் மட்டும் தெரியும் என விஷால் பேசுவதிலேயே அவர் மாட்டிக் கொண்டார் என சேகுவேரா பகீர் கிளப்பியுள்ளார்.

விஷாலுக்கு ஏன் பதற்றம்: ஸ்ரீரெட்டி பெயர் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுந்ததும் விஷால் ஏன் அப்படி பதறுகிறார், நடுங்கிக் கொண்டே பேசுவது அவர் முகத்திலேயே அவர் எந்தளவுக்கு மோசமானவர் என்பதை அப்படியே படம் போட்டுக் காட்டுகிறது. செருப்பால அடிக்கணும்னு சொல்றாரு, அந்தம்மா என்கிட்ட நிறைய செருப்பு இருக்குன்னு கமெண்ட் போடுது, செருப்போட கிளம்பி வந்துடப் போகுது விஷால் என பேசியுள்ளார் சேகுவேரா.

 

விஷாலுக்கு தைரியமில்லை: விஷால் 10 பேர் கொண்ட குழு அமைப்பாரா? எதுக்கு? இவர் மீதே பாலியல் குற்றச்சாட்டை ஸ்ரீரெட்டி வைத்திருக்கும் நிலையில், இவர் கொண்டு வரும் 10 பேர் எப்படி உத்தமர்களாக இருப்பார்கள் என்பது தெரியாதா? முதல்வரிடம் மனு கொடுத்து ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஹேமா கமிட்டி போல ஒரு குழுவை அமைக்க விஷால் முன் வருவாரா? சத்தியமா சொல்றேன் அவருக்கு அந்த தைரியம் இல்லை என விளாசி எடுத்துள்ளார். விஷாலை பற்றி தவறாக பேசுவது தவறு என அவரது ரசிகர்கள் சேகுவேராவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் ட்ரோல்: விஷாலின் பேச்சை சோஷியல் மீடியா முழுவதும் நெட்டிசன்கள் ஷேர் செய்து ட்ரோல் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். யூடியூப் சேனலில் பல பிரபலங்கள் விஷால் மற்றும் ஸ்ரீரெட்டி விவகாரம் பற்றி பேசி வருகின்றனர்.

Leave a Reply