23 in Thiruvananthapuram
TV Next News > News > Tamil News > ‘தம்பி அதை எடுத்துட்டு போப்பா’.. குறுக்கே வந்த அந்த கொடி.. பார்த்ததும் மாறிய எடப்பாடி முகம்.. போச்சே

‘தம்பி அதை எடுத்துட்டு போப்பா’.. குறுக்கே வந்த அந்த கொடி.. பார்த்ததும் மாறிய எடப்பாடி முகம்.. போச்சே

7 months ago
TV Next
96

திருச்சி; திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கே வந்த கொடி ஒன்றை பார்த்து எடப்பாடி பழனிசாமி கோபமாக ரியாக்சன் கொடுத்தது கவனம் பெற்றது.

 

தமிழ்நாட்டில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று இவர்கள் எல்லோரும் மொத்தமாக எடப்பாடி உடன் மேடையில் ஏற்றப்பட்டனர். திருச்சியில் நடந்த கூட்டத்தில் இவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

 

1.வடசென்னை – ராயபுரம் மனோ 2.தென்சென்னை – ஜெயவர்த்தன் 3.காஞ்சிபுரம் – ராஜசேகர் 4.அரக்கோணம் – ஏ.எல்.விஜயன் 5.கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ் 6.ஆரணி – கஜேந்திரன் 7.விழுப்புரம் – பாக்யராஜ் 8.சேலம் – விக்னேஷ் 9.நாமக்கல் – தமிழ்மணி 10.ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் 11.கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல் 12.சிதம்பரம் – சந்திரஹாசன் 13.நாகை – சுர்ஜித் சங்கர் 14.மதுரை – சரவணன் 15.தேனி – நாராயணசாமி 16.ராமநாதபுரம் – ஜெயபெருமாள 17.கோவை – சிங்கை ராமச்சந்திரன் 18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி 19.திருச்சி – கருப்பையா 20.பெரம்பலூர் – சந்திரமோகன் 21.மயிலாடுதுறை – பாபு 22.ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார் 23.தருமபுரி – அசோகன் 24.திருப்பூர் – அருணாசலம் 25.நீலகிரி – லோகேஷ் 26.வேலூர் – பசுபதி 27.திருவண்ணாமலை – கலியபெருமாள் 28.கள்ளக்குறிச்சி – குமரகுரு 29.சிவகங்கை – சேவியர் தாஸ் 30.நெல்லை – சிம்லா முத்துச்சோழன் 31.புதுச்சேரி – தமிழ்வேந்தன் 32.தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி 33.கன்னியாகுமரி – பசிலியா நசரேத் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை நேற்று திருச்சியில் தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

 

 


நேற்று விழாவில் பேசிய எடப்பாடி, சிறுபான்மை மக்கள் யாருக்காவது பிரச்சனை வந்தால் உங்களுக்கு பக்கபலமாக உறுதுணையாக இருப்போம்.இதை ஓட்டுகளுக்காக சொல்லவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.கவுக்கு தான் போட்டி. தமிழகத்தில் ஒரு மருத்துவக்கலூரியை ஸ்டாலினால் கொண்டு வர முடிந்ததா? எப்போ பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

 

உங்களுக்கு தில்லு, தெம்பு, திராணி இல்லை.. கேக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்.. அதற்காகத்தான் மக்கள் உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கே வாய்மூடி மவுனமாக இருந்துவிட்டு… இங்கே வந்து செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். உண்மையாகவே எய்ம்ஸ் விரைவாக கட்ட வேண்டும் என்று அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில்தான் குரல் கொடுத்து இருக்க வேண்டும், என்று கடுமையாக தாக்கி பேசினார்.

 

 


ஆனால், திமுக என்ன செய்தது. செங்கல்லை ரோட்டில் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை . நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். விளம்பரத்திற்காக செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். 38 எம்பிக்கள் உங்களுக்கு கிடைத்தது. இந்த செங்கல்லை கொண்டு போய் நாடாளுமன்றத்தில் காட்டி நீதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி இருக்கலாம், என்று கூறினார் . குறுக்கே வந்த கொடி: திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கே வந்த கொடி ஒன்றை பார்த்து எடப்பாடி பழனிசாமி கோபமாக ரியாக்சன் கொடுத்தது கவனம் பெற்றது. அவர் பேசிக்கொண்டே இருக்கும் போது குறுக்கே முக்குலத்தோர் என்று குறிப்பிடப்பட்ட கொடி ஒன்று வந்தது. இதை பார்த்ததும் எடப்பாடி முகம் மாறி ‘தம்பி அதை எடுத்துட்டு போப்பா’ என்று கூறினார். ஆனால் அது அந்த கொடிக்காக இல்லை.. அங்கே இருந்த கேமராவை கொடி மறைக்கிறது என்பதற்காகவே எடப்பாடி அப்படி கோபம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply