29 in Thiruvananthapuram

மதுரைக்கு அடித்த செம ஜாக்பாட்! அடுத்தடுத்து வரும் புதிய விமான சேவைகள்! கவனிச்சீங்களா? என்ன நடக்குது?

10 months ago
TV Next
107

 

சென்னை: மதுரைக்கு கடந்த சில நாட்களாக புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. திடீரென மதுரைக்கு விடப்படும் விமானங்களின் எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளன.

சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

 

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன. டாடா – 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வின்பாஸ்ட் – 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஜே.எஸ்.டபிள்யூ – ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு TVS – 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு பெகட்ரான் – 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு மிட்சுபிஷி – ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு Qualcomm – 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு ஹூண்டாய் – 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் மதுரையில் பெரிதாக முதலீடுகள் செய்யப்படவில்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு என்று சிறப்பு முதலீடுகள் எதுவும் வராதது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. சிப்காட், ஐடி துறையில் முதலீடுகள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை எம்எஸ்எம்இ துறையில் கூட முதலீடுகள் வராததுதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மதுரைக்கு இல்லை; மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை, அங்கே துறைமுகம் கொண்டு வர முடியாது என்பதால் பெரும்பாலும் பலரும் தூத்துக்குடி பக்கம் செல்வதே விவாதங்களை சந்தித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மதுரை மக்கள் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மதுரைக்கு குட் நியூஸ்: அதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு மார்ச் 31-ம் 2024 முதல் புதிய அட்டவணை அடிப்படையில் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. அதாவது கூடுதல் விமானம் இனி கோலாலம்பூருக்கு இயக்கப்படும் .

 

 

இதற்கான புக்கிங் தொடங்க உள்ளது. 24/7 ஏர்லைன்ஸ் அட்டவணையின் அடிப்படையில் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளனர். டெர்மினல் கட்டிடத்தின் நெரிசலைக் குறைக்க அங்கே கட்டிடம் மறுகட்டமைக்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இங்கே வெளிநாட்டு விமானங்கள் இயங்கும். புதிய விமானம்: இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி மும்பை – மதுரை – மும்பை விமானங்கள் 22-பிப்-2024 முதல் அமலுக்கு வருகிறது BOM 15:55 IXM 18:00 IXM 19:25 BOM 21:30 ஆகிய விமானங்கள் இங்கே வர உள்ளன. மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை. இருந்தாலும் தற்காலிகமாக உள்ளூர் விமான நிலையம்ச சர்வதேச விமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மதுரைக்கு நல்ல செய்தியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leave a Reply