சென்னை: கடந்த ஒருவார காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அக்டோபர் 19 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. அக்டோபர் 21 ஆம் தேதி திங்கட்கிழமை, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அக்டோபர் 23 ஆம் தேதியான நேற்று, சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை 59 ஆயிரத்தை நெருங்கி இருந்தது.
பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வழக்கத்தை விட, தங்க நகைகள் விற்பனை அதிகமாக இருக்கும். இதனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வந்தது.
இந்நிலையில் இன்று திடீரென தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது. இன்று வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 55 குறைந்து ரூ. 7,285ரூபாய்க்கும், ஒரு சவரன் 440 ரூபாய் குறைந்து ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,740க்கும், ஒரு சவரன் ரூ.61,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் பண்டிகை காலம் என்றபோதிலும் திடீரென தங்கம் விலை குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.