23 in Thiruvananthapuram
TV Next News > News > Tamil News > BJP Manifesto: அடடா இத்தனை அறிவிப்புகளா? களத்தை சூடாக்கும் பாஜக தேர்தல் அறிக்கை.! சிறப்பம்சங்கள் என்னென்ன?

BJP Manifesto: அடடா இத்தனை அறிவிப்புகளா? களத்தை சூடாக்கும் பாஜக தேர்தல் அறிக்கை.! சிறப்பம்சங்கள் என்னென்ன?

6 months ago
TV Next
112

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாஜக தேர்தல் அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் ஆகியோர்களை குறி வைத்து இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் பல முக்கிய திட்டங்கள் இதில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல்: அதன்படி முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் 3ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20ம் தேதியும், ஆறாம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதி கடைசி ஏழாம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நிறைவு பெற்றுள்ள நிலையில் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி : இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கிறது. சமூகத்தில் ஒவ்வொரு பிரிவின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு தழுவிய சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவைகளை உறுதி செய்ய நடவடிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உறுதிப்பாடு உள்ளிட்டவை காங்கிரஸ் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன

 

எதிர்பார்ப்புகள்: பாஜக தேர்தல் அறிக்கை: அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகன் அம்பேத்கர் பிறந்த நாளில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்‌ஷித் பாரத் திட்டங்கள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால இந்தியாவை நோக்கிய வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

 

யாரை நோக்கிய அறிக்கை?: மேலும் ஏழைகள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் விவசாயிகளை குறி வைத்து அவர்கள் தொடர்பான பிரச்சனைகளை களையும் வகையிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தேர்தல் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிக்கையை வெளியிடும் நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா என்பது குறித்தான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சிறப்பு குழு: கடந்த தேர்தல் அறிக்கைகளில் பொது சிவில் சட்டம் , அயோதியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்த நிலையில் தற்போது அவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதை அடுத்து அடுத்த கட்டமாக பாஜகவின் அதிரடி அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தங்களது அறிக்கையை அளித்துள்ள நிலையில் தற்போது அதனை மோடி வெளியிடுகிறார்.

 

Leave a Reply