29 in Thiruvananthapuram

துண்டு துண்டா போச்சே.. “ராகுலா? மோடியா?” ஓட்டு கேட்க இந்த “முகம்” வேணும்.. ஸ்டாலின் மாஸ்டர் பிளான்?

7 months ago
TV Next
38

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி விவகாரங்கள் பரபரத்து காணப்படுகின்றன.. இதுவரை ஒரு தரப்பிலும் கூட்டணி உறுதியாக அறிவிக்கவில்லை என்றாலும், அது சம்பந்தமான பேச்சுக்கள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.

நேற்று பாஜகவின் குஷ்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், “எப்படியாவது கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் ‘சீட்’ கேட்போம். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தரப்பில் காத்திருக்கிறார்கள்… வட மாநில தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி திமுகவும் “செக்” வைக்கும். இவர்கள் கை கட்டி நின்றாலும் சரி, கையேந்தி கேட்டாலும் சரி, திமுக அதிக தொகுதிகளை தரப்போவதில்லை.

தென் மாவட்டம்: இவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள்.. ஆனால், மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடுகிறார்கள். இன்னும் தண்ணீரில் இருந்து தென் மாவட்ட மக்கள் மீளவில்லை. வரட்டும் தேர்தல் என்று காத்திருக்கிருக்கிறார்கள்.. எங்களை பொறுத்தவரை பிரதமர் மோடி முகம் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் யார் முகத்தை காட்டி ஓட்டு கேட்பார்கள்?

உலக அளவில் 78 சதவீத ஆதரவை பெற்று உலக தலைவர்களில் முதலிடத்தில் இருக்கும் மோடியா? நாட்டில் நிராகரிக்கப்பட்ட ராகுலா? என்பதை மக்கள் சீர்தூக்கி பார்த்தே வாக்களிப்பார்கள்.. மாற்றத்தை மோடியால் மட்டுமே தர முடியும். இந்தியா கூட்டணி ஏமாற்றத்தையே பெறும்” என்று கூறியிருந்தார். குஷ்பு கேள்வி: குஷ்புவின் இந்த பேச்சு பெரும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.. அத்துடன், காங்கிரசுக்கு நிஜமாகவே, திமுக எத்தனை சீட்களை தரப்போகிறது? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டந்த முறை தேர்தலின்போது, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை லட்டு போல காங்கிசுக்கு அள்ளி தந்தது திமுக.. ஆனால், இந்த முறை அவ்வளவு தர வாய்ப்பில்லை என்கிறார்கள்.. மற்றொருபக்கம், புதுச்சேரியுடன் சேர்த்து 11 இடங்கள் தரப்படலாம் என்கிறார்கள். ஆனால், காங்கிரஸோ, எப்படியாவது 20 சீட்டுக்களை வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.

15 சீட்டுக்கள்: அதுமட்டுமல்ல, 20 சீட் கேட்டால்தான், 15 சீட்டாவது கிடைக்கும் என்பதால், சீட் எண்ணிக்கையை உயர்த்தி கேட்கும்படி, மேலிட காங்கிரஸே உத்தரவிட்டிருக்கிறதாம்.. அதற்கேற்றபடி, மாநில தலைவர் அழகிரி எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும், இந்த முறை அதிக சீட்களை திமுகவிடம் கேட்டு வாங்குவோம் என்றே சொல்லி வருகிறார். தேசிய அளவில் காங்கிரசுடன் திமுக இணக்கமாக இருந்தாலும், தமிழகத்தின் கோஷ்டி பூசல், வேட்பாளர் உள்ளிட்ட விவரங்களில் அதிருப்தி வைத்திருப்பதாக தெரிகிறது. அதனால்தான், இந்த முறை அதிக சீட்டுக்களை ஒதுக்க திமுக யோசிக்கிறதாம். எனினும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெரும்பான்மையாக பெற வேண்டுமானால், காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கையை திமுக தர வேண்டும் என்கிறது ஒரு தரப்பு.

தனித்து காங்கிரஸ்: ஆனால், மற்றொரு தரப்பினரோ, தேசிய கட்சியான, காங்கிரஸ் தனியாக நிற்கட்டுமே.. எந்த கூட்டணியும் இல்லாமல் திமுகவும் தனித்து நின்று ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் எதிர்ப்பில் இருந்து மீண்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய முடியும். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் போல, யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டு, மக்கள் பக்கம் நிற்க வேண்டும். காங்கிரஸ் தேவைல்லாத சுமை என்கிறார்கள். கள அரசியல்: இதற்கு நடுவில் இன்னொரு தரப்பினரோ, யார் வலியவர்கள் என்று எடைபோட இது நேரம் கிடையாது.. அதிமுக பாஜக இரண்டும் ஒன்றுதான் என்பதால், திமுக கவனமாக காய்நகர்த்த வேண்டி உள்ளது. காங்கிரசுடன் சேர்த்து, இன்னும் சில கட்சிகளையும் இணைத்தால்தான், பாஜகவை வீழ்த்த முடியும் என்கிறார்கள். ஆக மொத்தம், தேர்தல் நெருங்கி வருவதால், களஅரசியல் அனலடிக்க துவங்கிவிட்டது.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Tvnext Tamil News

Leave a Reply