டெல்லி: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரத்துக்கு மிக அருகே உள்ளது கச்சத்தீவு. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனால் கச்சததீவில்...