திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ஒரு வீட்டில் இருந்த 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது....