சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. இது தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஅமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பினனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர்...