29 in Thiruvananthapuram

Tamil

திமுக கூட்டணியில் விசிக வெளியேறினால் தீபாவளிபோல கொண்டாடுவார்கள் – திருமாவளவன் பரபரப்பு

செங்கல்பட்டு: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன், “நாளை திமுக கூட்டணி வேண்டாம் என்று நான் அறிக்கை விட்டால் ஆஹா.. ஓஹோ என்று மகிழ்ச்சியடைவார்கள். ஏன் இன்னொரு தீபாவளி பண்டிகை போல கொண்டாடுவார்கள்.” என்று வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடி எதிரியாக இருப்பது விசிக...

மோடி தான் என்னுடைய சிறந்த நண்பர்..” பாகிஸ்தான் பிரதமரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பாராட்டிய டிரம்ப்

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் கையெழுத்தானது. அப்போது பேசிய டிரம்ப், “இந்தியா மிகவும் சிறந்த நாடு. எனது மிகச் சிறந்த நண்பர் உச்ச பொறுப்பில் இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் அற்புதமான பணிகளை செய்கிறார்” என்று பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டே டிரம்ப் இவ்வாறு பேசினார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான...

விஜய்க்கு போனை போட்டு நடிகர் சஞ்சீவ் சொன்ன 2 வார்த்தைகள்! அதுக்கு மேல பேசினால் கோபம் வந்துடுமாம்

சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவருடைய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் விளக்கியுள்ளார். மேலும் விஜய்யுடன் தான் போனில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது சிறு வயது நண்பனான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே...

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஸ்ரீவர்ஷினி.. சர்வேயர் தந்தை உள்பட குடும்பமே சிறையில்!

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவியை கைது செய்தனர். இதற்கு உதவி செய்ததாக மாணவியின் பெற்றோர்களையும் கைது செய்தனர். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள்...

14 மணி நேரத்தில் கவிழ்ந்த அரசு.. பிரான்ஸ் அதிபருக்கு 2 பக்கமும் விழும் அடி! தங்கம் விலை உயர இதுவும் காரணம்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்று வெறும் 14 மணி நேரத்தில் அந்நாட்டுப் பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா செய்தது. அங்கு நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன.. இது உலகளவில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் ராஜினாமா செய்துள்ளார். அவருடைய புதிய...

பீகாரில் சூடுபிடித்த தேர்தல் களம்.. தொகுதி பங்கீட்டில் கட்சிகள் மும்முரம்! யார் யாருக்கு எவ்வளவு?

பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 2 நாட்களாக பீகாரில் ஆய்வு மேற்கொண்டிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் பீகார் சட்டப்பேரவைக்கான ஆட்சிக்காலம் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார். பீகாரில் மொத்தம்...

போதும் சாமி என்ன விட்ருங்க.. அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய்! ரஜினி எடுத்த முடிவு.. பிரபலம் நறுக்!

சென்னை: மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் பிரச்சாரத்தை ஆரம்பித்து ஒரு மாதத்துக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தொடர் நெருக்கடிகளால் விஜய் ரஜினியை, அரசியலை விட்டு விலகும் முடிவை எடுப்பார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் எஸ்வி சேகர்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக...

பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 22 பேர் பலி, பலர் காயம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கத்திற்கான வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகள்...

H-1B விசா கட்டண உயர்வு.. லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிக்கொட்டிய டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் H-1B விசாவைதான் வைத்திருக்கிறார்கள். இந்த விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் தற்போது உயர்த்தியிருக்கிறார். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் H-1B விசாவை வைத்திருக்கும் 3.5 லட்சம் இந்தியர்களையும், புதியதாக அமெரிக்காவுக்கு வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கும். H-1B விசா என்பது தற்காலிக அமெரிக்கா வேலை விசா ஆகும். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்த விசா முறை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்...

இந்தியா மீதான பரஸ்பர வரியை ரத்து செய்யும் அமெரிக்கா.. மொத்த வரியும் 15% குறையுமாம்! முக்கிய தகவல்

டெல்லி: இப்போது இந்தியா மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தியா மீதான வரியை அமெரிக்கா சீக்கிரமே ரத்து செய்யலாம் என்றும் ஒட்டுமொத்த வரி 15%ஆக குறைக்கப்படலாம் என்றும் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அப்படித் தான் இந்தியா மீது அவர்...