24 in Thiruvananthapuram

10 சின்னம்.. விஜய் எடுத்த லிஸ்ட்.. ஆனா அதெல்லாம் கிடைக்காது.. பரவாயில்லையா? டெல்லி போடும் பிரஷர்?

Posted by: TV Next November 12, 2025 No Comments

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) செவ்வாய்க்கிழமை மனு அளித்தது. இந்த சின்னம் விவகாரத்தில் “டெல்லி” விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தங்களுக்கு விருப்பமான சின்னங்களின் பட்டியலை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். “நாங்கள் 10 சின்னங்களின் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளோம். இதில், ஏற்கனவே இலவச சின்னங்கள் பட்டியலில் உள்ள ஏழு சின்னங்களும் அடங்கும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் பிரச்சாரம்) கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.

நாங்கள் சொந்தமாக உருவாக்கிய மூன்று சின்னங்களையும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குச் சமர்ப்பித்து, வரவிருக்கும் தேர்தல்களுக்காக அவற்றில் ஒன்றைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், இக்கட்சியின் முதல் தேர்தல் களமாக இருக்கும்கடந்த 2024 பிப்ரவரி 2 அன்று இக்கட்சி தொடங்கப்பட்டபோதிலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தது. மேலும், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விளவங்கோடு, விக்ரவாண்டி, மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிடாமல் விலகியே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடையேதான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தேர்தலை மையமாக வைத்து டெல்லி புதிய செக் ஒன்றை வைத்து உள்ளதாம். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயுடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என ஈபிஎஸ்-ஐ அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கட்சி வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அமித் ஷா தனிப்பட்ட முறையில் ஈபிஎஸ்-க்கு தொலைபேசி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். விஜயை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது மிக முக்கியமான பணி என்று அமித் ஷா அப்போது வலியுறுத்தியுள்ளார்.ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜயை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.மேலும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இரு தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்குமாறும் அமித் ஷா, ஈபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தவெக அங்கீகரிக்கப்படாத கட்சி; அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோர முடியாது என தேர்தல் ஆணையம் வாதம் வைத்துள்ளது.

தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, டிஜிபி பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

இதை மனதில் வைத்து.. விஜய்யிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள்.. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஆளும் கட்சிகளை எதிர்க்க முடியாது. இங்கே பாஜக, அங்கே திமுகவை ஒரே நேரத்தில் எதிர்க்க நீங்கள் ஜெயலலிதா கிடையாது. உஷாராக இருங்கள். இப்பொது வழக்கில் வசமாக மாட்டிவிட்டீர்கள். கவனமாக இருங்கள். கோர்ட் உங்கள் மீது கோபத்தை காட்டிவிட்டது. டெல்லி சப்போர்ட் இல்லாமல் நீங்கள் தாக்கு பிடிக்க முடியாது. கவனமாக இருக்கவும்.

உங்களுக்கு தேர்தல் நேரத்திலும் எங்கள் லாபி தேவை. நீங்கள் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. அப்படி இருக்க.. எப்படி ஆட்சிக்கு வர நினைப்பீர்கள்.. முதலில் உங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்குமா?

தமிழ்நாடு முழுக்க தொகுதிக்கு தொகுதி வேறு சின்னம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதை வாங்கவும் கோர்ட்டுக்கு செல்ல நேரிடும்.. இதற்குத்தான் டெல்லி லாபி தேவைப்படும். சின்னம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அரசியலில் சின்னாபின்னம் ஆகிவிடுவீர்கள்.. மறக்க வேண்டாம் என்று விஜயிடம் டெல்லி கூறி உள்ளதாம்.இதை அடிப்படையாக வைத்தே விஜய் – பாஜக இடையே கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். விஜய்க்கு எதிராக கரூர் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விஜய்க்குத்தான் சிக்கல். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். மிக லேட்டாக கூட்டத்திற்கு வந்தது. அதோடு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்று சில இடங்களில் காத்திருந்தார். அதன்பின் போலீஸ் சொன்ன அறிவுரைகளை கேட்கவில்லை. இப்போது வழக்கு சிபிஐ வசம் இருப்பதால்.. சின்னம் விவகாரத்தோடு சேர்த்து சிபிஐ வழக்கும் விஜய்க்கு நெருக்கடியாக மாறி உள்ளது.