29 in Thiruvananthapuram

மோடி தான் என்னுடைய சிறந்த நண்பர்..” பாகிஸ்தான் பிரதமரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பாராட்டிய டிரம்ப்

Posted by: TV Next October 14, 2025 No Comments

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் கையெழுத்தானது. அப்போது பேசிய டிரம்ப், “இந்தியா மிகவும் சிறந்த நாடு. எனது மிகச் சிறந்த நண்பர் உச்ச பொறுப்பில் இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் அற்புதமான பணிகளை செய்கிறார்” என்று பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டே டிரம்ப் இவ்வாறு பேசினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் எகிப்தில் நேற்று கையெழுத்தானது. இதன் மூலமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளிலும் அமைதி திரும்பியுள்ளது.

எகிப்தின் ஷர்ம்எல் ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட 31 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் பங்கேற்றார். இந்த மாநாட்டின் இறுதியாக காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது இந்திய பிரதமர் மோடியை டிரம்ப் வெகுவாக புகழ்ந்து பேசினார். டிரம்ப் கூறுகையில், “இந்தியா மிகவும் சிறந்த நாடு. எனது மிகச் சிறந்த நண்பர் உச்ச பொறுப்பில் இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் அற்புதமான பணிகளை செய்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார

டிரம்ப் இவ்வாறு பேசும் போது பக்கத்திலேயே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நின்று கொண்டு இருந்தார். உடனே திரும்பிய டிரம்ப், “அப்படித்தானே?” என்றார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப்பும் ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தார்.

காசா அமைதி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதை தவிர்த்து இருந்தார். இந்தியாவின் சார்பாக வெளியுறவு இணை அமைச்சர் பங்கேற்று இருந்த நிலையிலும் கூட பிரதமர் மோடி குறித்து தனது உரையில் டிரம்ப் பேசியிருப்பது இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள இணக்கமான நல்லுறவை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார

அதேவேளையில், டிரம்ப் பல்வேறு இடங்களில் “இந்தியா மிகச் சிறந்த நாடு”, “மோடி எனது அருமை நண்பர்” என்று புகழாரம் சூட்டினாலும், வரி விதிப்பு விவகாரங்களில் பிற நாடுகளை விட மோசமாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.அண்மையில், அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வழியாக பிரதமர் மோடிக்கு டிரம்ப் தனது கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்… நீங்கள் மிகச்சிறந்தவர்” என்று எழுதப்பட்டு இருந்தது.

முன்னதாக டிரம்ப் பாகிஸ்தான் தலைவரையும் பாராட்டி பேசினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் முனீரை புகழ்ந்து பேசிய ட்ரம்ப், ஆசிப் முனீர் தனக்கு பிடித்தமான ஃபீல்டு மார்ஷல் என்று கூறினார்.