27 in Thiruvananthapuram

போதும் சாமி என்ன விட்ருங்க.. அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய்! ரஜினி எடுத்த முடிவு.. பிரபலம் நறுக்!

Posted by: TV Next October 5, 2025 No Comments

சென்னை: மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் பிரச்சாரத்தை ஆரம்பித்து ஒரு மாதத்துக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தொடர் நெருக்கடிகளால் விஜய் ரஜினியை, அரசியலை விட்டு விலகும் முடிவை எடுப்பார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் எஸ்வி சேகர்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் பிரச்சார பயணத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தற்போது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி விஜய், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரச்சாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், விஜய் அன்றைய காலை அதே நேரத்தில் தான் சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சி நேரம் முழுவதும் தாமதமானது. கரூரில் மதியம் 12 மணிக்கு பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், விஜய் சுமார் 6 முதல் 7 மணி நேரம் தாமதமாக வந்தார். இதனால் கூட்டமாக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் கடும் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் நின்று காத்திருந்தனர். மாலை விஜய் வந்தபோது அவரை நேரில் பார்க்க மக்கள் திடீரென முன் பக்கம் நெருங்கியதில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் தடுமாறி கீழே விழுந்ததால் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்த நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் 30 உயிரிழப்புகள் என கூறப்பட்ட நிலையில், பின்னர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த சம்பவத்திற்கு விஜயே நேரடியாகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன. அவரின் தாமதமும், அதை முன்கூட்டியே மக்களிடம் தெரிவிக்காததும் தான் விபத்துக்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காவல்துறை அறிவுறுத்தல்களை மீறி, அவரது தொண்டர்கள் அரசு கட்டிடங்கள், விளக்கு கம்பங்கள், மரங்கள் மீது ஏறி கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சோர்வடைந்த கூட்டத்தில் நெரிசல் விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் கரூரில் பேச்சை முடித்து திருச்சிக்கு கிளம்பியபோது உயிரிழப்புகள் குறித்து பதில் அளிக்க மறுத்தார். பின்னர் சென்னை வந்தபோது அவர் “மனம் கணக்கிறது” என ட்வீட்டில் போட்டதோடு, விபத்து நடந்த 4 நாட்களுக்குப் பிறகே அவர் வீடியோ வெளிட்டது சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது. இந்நிலையில், அவரது கட்சித் தலைவர்கள் ஆனந்த் சி.டி.ஆர், நிர்மல் குமார், ஆதவ், அர்ஜுனா உள்ளிட்ட பலர்மீதும் போலீசார் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

சட்டரீதியாகவும், பொது வெளியிலும், விஜய் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார். இதுவரை அவரை ஆதரித்து வந்த சிலரும் தற்போது கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான எஸ்.வி. சேகர், “கரூர் சம்பவத்தால் விஜயின் மேக்கப் கலைந்து விட்டது” என கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,” கரூர் சம்பவத்தில் விஜயின் மேக்கப் கலைந்து விட்டது. இப்படி பிரச்சினை வரும் என்று தெரிந்து தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகி விட்டார். தண்ணீர் தெளிவாக இருந்தாலும் உள்ளே காலை விட்டால்தான் என்ன முதலை இருக்கும் என தெரியவரும் என சொல்லி இருக்கிறா.ர் 27 ஆயிரம் பேர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத விஜய், 10 கோடி தமிழ்நாட்டை எப்படி கட்டுப்படுத்துவார். கரூர் விகாரத்தில் விஜயை கைது செய்து அவரை இன்னும் பெரிய ஆளாக்க திமுக அரசு முயற்சிக்காது. அதே நேரத்தில்ரஜினிகாந்தை போல விஜயும் அரசியல் களத்தில் இருந்து பின்வாங்கி விடுவார்” எனக்கூறி இருக்கிறார்.