24 in Thiruvananthapuram

வரிசை கட்டி வரும் ஆஃபர்கள்.. சீனாவுடன் போட்டி போடும் இந்தியா! சீனிலிருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான்!

Posted by: TV Next February 22, 2025 No Comments

டெல்லி: போர் விமானங்கள் விஷயத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவை அணுகி வருகின்றன. இது சீனாவுக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை வளர இருக்க கூடாது என்பதற்காக இந்தியாவை வைத்து அமெரிக்கா விளையாடி வருகிறது. இந்த விளையாட்டில் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்திருந்தபோது, ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பாக பேசப்பட்டிருந்தது. குறிப்பாக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கருத்து ஒற்றுமை இரு தலைவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்தது. இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாது. அதை நாங்கள் தருகிறோம் என டிரம்ப் கூறியிருக்கிறார். அதாவது எப் 35 விமானத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.

ராணுவ ரீதியாக இந்தியா அமெரிக்காவுக்கு மிக முக்கியமாக இருப்பதால் இந்த விமானத்தை வழங்குவதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டார். மட்டுமல்லாது இதற்கு மிக முக்கியமான மற்றொரு காரணம் சீனாதான். ஆசியாவில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அதன் ஆதிக்கத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவும் அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. அதற்காக இந்தியாவை வைத்து அது விளையாடி வருகிறது.

இந்த விளையாட்டு குறித்து இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை. இருப்பினும் தனது சொந்த ஆதாயத்திற்காக இந்தியா இந்த விஷயங்களில் பெரியதாக தலையீடு செய்யாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் எப் 35 போர் விமானம் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.

அமெரிக்கா மட்டுமல்லாது ரஷ்யாவும் இந்தியாவுக்கு போர் விமானத்தை வழங்க முன்வந்திருக்கிறது. அமெரிக்கா வெறும் விமானத்தை மட்டும் கொடுப்பதாக சொன்ன நிலையில், விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையே கொடுக்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறி இருக்கிறது. ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக சுகோய்-57 இருக்கிறது. எல்லா விதத்திலும் அமெரிக்க விமானத்தை விட ரஷ்ய விமானம் சிறந்ததாக இருந்து வரும் நிலையில் இந்த ஆஃபரை இந்தியா நிச்சயமாக பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் சீனாவும் பாகிஸ்தானும் இந்த இந்தியாவுக்கான ஆஃபர்களை பொறாமையுடன் பார்த்து வருகின்றன. காரணம் பாகிஸ்தானிலும் இதுவரை ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் எதுவும் கிடையாது. பாகிஸ்தானுக்கு சீனா போர் விமானங்களை வழங்குவதாக சொல்லி இருந்தாலும் எப்பொழுது வழங்குகிறோம் எத்தனை வழங்குகிறோம் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

இப்படி இருக்கையில் இந்தியாவுக்கு இரண்டு நாடுகள் போர் விமானத்தை விற்க முன்வந்திருப்பது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.