27 in Thiruvananthapuram
TV Next News > News > National > ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. போலி நீதிமன்றம் அமைத்து கலெக்டருக்கே உத்தரவு போட்ட குஜராத் இளைஞர்

ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. போலி நீதிமன்றம் அமைத்து கலெக்டருக்கே உத்தரவு போட்ட குஜராத் இளைஞர்

12 hours ago
TV Next
6

காந்தி நகர்: இதுக்கே ரூம் போட்டு யோசிப்பாங்க போல என்று நாம் யோசிக்கும் அளவுக்கு இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குஜராத்தில் அப்படி தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி டோல் கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைத் தாண்டி ஒருவர் போலியாக நீதிமன்றத்தையே அமைத்துள்ளார்.

எப்படி தான் இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களோ என்று நாம் மிரண்டு போகும் அளவுக்கு இப்போது மோசடிகள் அரங்கேறி வருகிறது. போலி அரசு அலுவலகம், போலி டோல் கேட்களை கூட அமைத்து மோசடி செய்தனர்.

ஆனால், இங்கு ஒருவரை அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போலப் போலியாக நீதிமன்றம் ஒன்றையே அமைத்துள்ளார். போலி நீதிமன்றம் அமைத்த இந்த நபர் கடந்த சில ஆண்டுகளாகப் பல உத்தரவுகளையும் போட்டுள்ளார் என்பதே ஷாக் செய்தியாகும். போலி நீதிமன்றம்: இந்த மோசடியில் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரை குஜராக் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இவர் முதலில் கடந்த 2019ம் ஆண்டு அரசு நிலம் தொடர்பான வழக்கில் ஒருவருக்கு ஆதரவாகச் செயல்பட இந்த போலி நீதிமன்றத்தை அமைத்து இருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். அதைத் தொடர்ந்து இப்படியே சுமார் 5 ஆண்டுகளாக இந்த போலி நீதிமன்றம் செயல்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தன்னை ஒரு தீர்ப்பாயத்தின் நீதிபதி போலக் காட்டிக் கொண்டு கிறிஸ்டியன் மக்களை ஏமாற்றி இருக்கிறார். நில தகராறு உள்ளிட்ட விஷயங்களைக் கையாள அரசு தன்னை நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் பணம் தருவோருக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கி மோசடி செய்துள்ளார். அகமதாபாத் நகர சிவில் நீதிமன்றப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவரைக் கைது செய்துள்ளனர்.

 

எப்படி: இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை முதலில் கிறிஸ்டியன் சேகரிப்பாராம். பிறகு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் பிரச்சினையை முடித்துத் தருவதாகச் சொல்லி மோசடி செய்துள்ளார். வழக்கு கொடுத்தவரைத் தொடர்பு கொள்ளும் அவர், உங்கள் பிரச்சினையைச் சரி செய்ய அரசு தன்னை நியமித்துள்ளதாகக் கூறிக்கொள்வார். பிறகு இரு தரப்பினரையும் காந்தி நகரில் உள்ள தனது ஆபீசுக்கு அழைப்பாராம். அந்த அலுவலகம் பார்க்க அப்படியே நீதிமன்றத்தைப் போல வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

 

மோசடி: அங்கு வழக்கு விசாரணை போல ஒன்றை நடத்தி, யார் தனக்குப் பணம் கொடுத்தாரோ அவருக்குச் சாதகமான தீர்ப்பைக் கொடுப்பது மோசடி செய்து இருக்கிறார். அவரது கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போல நடித்துள்ளனர். இதனால் இங்கு வந்த அனைவருமே இது உண்மையான நீதிமன்றம் என்றே நம்பி ஏமாந்துள்ளனர். சிக்கியது எப்படி: கடந்த 2019ல் கிறிஸ்டியன் அரசு நிலம் தொடர்பான வழக்கில் தனக்குப் பணம் தந்த நபருக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதாவது பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் இதனால் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அந்த நபரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டியன் பிரச்சினையை முடித்துத் தருவதாகப் பணம் வாங்கியுள்ளார். பிறகு இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நிற்காமல் தனது போலியான உத்தரவை மற்றொரு வழக்கறிஞர் மூலம் கலெக்டருக்கே அனுப்பியுள்ளார். அந்த உத்தரவு போலி… இவரே ஒரு மோசடி பேர்வழி என்பது இப்போது தான் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது இப்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply