வாஷிங்டன்: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் H-1B விசாவைதான் வைத்திருக்கிறார்கள். இந்த விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் தற்போது உயர்த்தியிருக்கிறார். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் H-1B விசாவை வைத்திருக்கும் 3.5 லட்சம் இந்தியர்களையும், புதியதாக அமெரிக்காவுக்கு வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கும்.
H-1B விசா என்பது தற்காலிக அமெரிக்கா வேலை விசா ஆகும். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்த விசா முறை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி உடையவர்களுக்கும், திறமை உடைய வெளிநாட்டினருக்கும் இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை பார்க்க முடியும்.
இந்த விசா 3 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். அதிகபட்சமாக விசாவை 6 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் இதனை புதுப்பிக்க வேண்டும்அமெரிக்காவில் தற்போது H-1B விசாவின் மூலம் சுமார் 5 லட்சம் பேர் தங்கி வேலை பார்க்கிறார்கள். இவர்களில் 71% அதாவது 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். 3-5 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் இந்த விசா மூலம் வசித்து வரும் இந்தியர்கள் பலரும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால், குடியுரிமை இதுவரை கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் திடீரென விசா கட்டணத்தை ரூ.8.8 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு புதியதாக வேலைக்கு போக விரும்பும் இந்தியர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிதாக விசா விண்ணப்பிப்பவர்கள் ரூ.88 லட்சம் ரூபாய் கட்டினால் மட்டுமே H-1B விசாவை பெற முடியும். அதேபோல அமெரிக்காவில் ஏற்கனவே H-1B விசாவின் மூலம் தங்கி இருப்பவர்கள் விசாவை புதுப்பிக்க வேண்டும் என்றாலும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது அறிவியல் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்த நடைமுறையில் அந்நிறுவனங்களுக்கு இரண்டு வகையில் லாபம் இருக்கும். ஒன்று இந்தியா போன்ற பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி கொண்ட நாடுகளில் இருந்து திறமையானவர்களை வரவழைப்பது மூலம், குறைவான ஊதியமே அந்த தொழிலாளர்களுக்கு அதிகப்படியான உதயமாக தெரியும் எனவே குறைவான சம்பளத்தில் அவர்களை வேலை வாங்கி விட முடியும்.
அதேபோல அமெரிக்காவுக்கு அழைத்து வந்திருக்கும் தொழிலாளி, புலம்பெயர் தொழிலாளி என்பதால் நேரம் காலம் இன்றி அவர்களை இஷ்டத்துக்கு கசக்கி பிழிய முடியும். மறுப்புறம் அமெரிக்காவிலிருந்து உள்நாட்டு மக்களை வேலைக்கு அமர்த்தினால், தொழிலாளர் நல உரிமைகளை பின்பற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படும். எனவே புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இந்த விஷயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். அப்படி பார்த்தால், விசா கட்டண உயர்வு இந்நிறுவனங்களை பாதிக்கும்.
ஆனால், இப்போதைக்கு அமெரிக்காவின் புதிய விசா கட்டணம் நடைமுறையை கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்றிருக்கின்றன. இருந்தாலும் அந் நிறுவனங்களுக்கு இது பின்னடைவாகவே அமையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர
.