27 in Thiruvananthapuram

CWC: கமல்ஹாசனிடம் காதலை சொல்ல சென்றேனா? இதெல்லாம் நியாயமே இல்லை! கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

Posted by: TV Next July 31, 2025 No Comments

சென்னை: நடிகர் கமல்ஹாசனிடம் நான் காதலை சொன்ன சென்றேனா? இதை தவறாக புரிந்து கொண்டு செய்தியாக பரப்புவது நியாயமே இல்லை என்றும் நாகரீகமற்றது என்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளியில் கமல்ஹாசன் குறித்து லட்சுமி கூறிய கருத்து வைரலான நிலையில் அவர் தற்போது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: “நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான். 45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் குக்கு வித் கோமாளியில் நன்றாக ரசித்து பகிர்ந்தேன். இதைப் தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும் கூட” என தெரிவித்துள்ளார

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். வாராவாரம் இவர் செய்யும் சமையலை செஃப்கள் பாராட்டுகிறார்கள். வீட்டில் நிறைய பேருக்கு சமைத்து சமைத்து தனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார்.

கேரள சமையலை எல்லாம் செய்து அசத்துகிறார். முதல்முறையாக சிக்கனை வைத்து ஒரு நான் வெஜ் டிஷ் செய்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளியில் கல்யாண வீட்டு சமையல் என்ற கருப்பொருளை கொண்டு சமையல் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது குக்- கோமாளி பேரிங்கில் ரஜினி, கமல், சிம்பு, விஜய், பகத் பாசில், சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகரின் கட் அவுட்டுக்கு மாலை அணிவிக்க வேண்டும். அந்த கட் அவுட்டில் உள்ள நடிகர் கெட் அப்பில் கோமாளிகள் வருவார்கள். அதன்படி, ராஜுவுக்கு ராமர், உமைருக்கு சுனிதா, பிரியா ராமனுக்கு புகழ், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தங்கதுரை, நந்தகுமாருக்கு விக்கி சிவா, மதுமிதாவுக்கு குரேஷி, ஷபானாவுக்கு சரத் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இந்த பேரிங் நிகழ்ச்சியின் போது லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சுவாரஸ்யமான தகவல் தெரிவித்திருந்தார். அதில் “கமல்ஹாசனை காதலித்தேன். ஒருமுறை வாய்ப்பு கிடைத்தபோது அவரை நேரில் பார்க்கச் சென்றேன். அப்போது எனது காதலை அவரிடம் சொல்லவும் தயாராக இருந்தேன். கமல்ஹாசனும் வந்தார். நான் அவரிடம் காதலைச் சொல்ல முற்பட்டபோது, திடீரென அவர் என்னை ‘தங்கை போல் இருப்பதாக’ கூறிவிட்டார்” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியது வைரலான நிலையில் தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.