காசான்: ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இது சாத்தியமாகும்பட்சத்தில், பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் தொலை தூர பயணம் என்றாலும் சரி.. குறுகிய தொலைவு கொண்ட பயணம் என்றாலும் சரி.. ரயில் வசதி இருந்தால் பயணிகளின் முதல் விருப்ப தேர்வு ரயிலாகத்தான் இருக்கும். பாதுகாப்பான பயணம், மலிவான கட்டணம், சரியான நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால் பயணிகள் ரயிலில் செல்லவே அதிகம் விருப்பப்படுவார்கள்.
அம்ரித் பாரத் ரயில்: சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் அனைவரும் அனைத்து தரப்பினரும் பயணிக்க கூடிய பொதுப்போக்குவரத்து என்றால் அது ரயில்கள்தான். ரயில்களின் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் வரிசையில் அம்ரித் பாரத் ரயில்களையும் இயக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் கொஞ்சம் அதிகம் என்பதால் நடுத்தர வசதி கொண்ட மக்களும் சாமானிய ஏழை எளிய மக்களும் அதில் பயணம் செய்ய கொஞ்சம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், தான் மலிவான கட்டணத்துடன் நவீன வசதிகள் கொண்ட அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டது. இதன்படி, அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்று வந்தது.
தமிழகத்தில் 2 ரூட்: ஏசி வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரயில்கள் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 26 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில் தமிழக ரூட்டில் இரண்டு ரயில்களும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டணம் எவ்வளவு இருக்கும்?: வந்தே பாரத் ரயில்களை ஒப்பிடும் போது அம்ரித் பாரத் ரயில்களில் கட்டணவும் மிகவும் மலிவாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேவேளையில் தற்போது இயக்கப்படும் சாதாரண மெயில் /எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தை விட அம்ரித் பாரத் ரயில்களில் கட்டணம் 15 -17 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.