23 in Thiruvananthapuram
TV Next News > News > National > பேசுனதெல்லாம் போதும்.. மாற்றப்படும் பாஜக மாநில தலைவர்கள்.. இந்த முறை உள்ளே வரும்.. புது பவர் சென்டர்

பேசுனதெல்லாம் போதும்.. மாற்றப்படும் பாஜக மாநில தலைவர்கள்.. இந்த முறை உள்ளே வரும்.. புது பவர் சென்டர்

5 months ago
TV Next
82

சென்னை: தேசிய அளவில் பல மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர். இந்த முறை தலைவர்கள் தேர்வில் புதிய பவர் சென்டர் ஒன்று தலையிட உள்ளதாம்.

மத்திய அமைச்சரவை நேற்று முதல்நாள் அமைக்கப்பட்டது. இதை பார்க்க முழுக்க முழுக்க மோடியின் தேர்வு போல.. அமித் ஷா சாய்ஸ் போல தெரியலாம். ஆனால் அமைச்சரவையை தாண்டி மோடி – ஷா இனி கட்சி நிர்வாகத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிகிறது. மாறாக ஆர்எஸ்எஸ் மீண்டும் பாஜகவின் நிர்வாக ரீதியான முடிவுகளில் தலையிட உள்ளதாம்.

கடந்த லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்காக வேலை பார்க்கவில்லை. உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜகவின் டாப் மாநிலங்களில் கூட பாஜகவிற்காக ஆர்எஸ்எஸ் வேலை பார்க்கவில்லை.

அதோடு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்தில் மக்களவை பிரச்சாரத்தின் “கண்ணியமான” தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை என்று மோடியை மறைமுகமாக தாக்கினார்.

அதோடு இல்லாமல் மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும். மணிப்பூரில் நடக்கும் விஷயங்களை தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். பாஜகவையும், மோடியையும் தனது பேச்சு மூலம் மறைமுகமாக தாக்கினார்.

முதல்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எனப்படும் இந்த துறையின் அமைச்சராக கடந்த முறை மன்சுவிக் மாண்டவியா இருந் நிலையில் நட்டா அந்த துறையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது

புதிய தலைவர் தேர்வில் கண்டிப்பாக ஆர்எஸ்எஸ் தலையீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிர ஆர்எஸ்எஸ் சேவகர் ஒருவரைத்தான் பாஜக தலைவராக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளதாம். முக்கியமாக பாஜக தேர்தலில் தனி மெஜாரிட்டி பெறாமல் இருக்க மோடி – ஷா ஆகியோர்தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் கருதுகிறதாம்.

இதன் காரணமாக பாஜக தேசிய தலைவர் மட்டுமின்றி பாஜக மாநில தலைவர்களையும் மாற்றும் முடிவில் ஆர்எஸ்எஸ் தலையிட இருக்கிறதாம். ஆர்எஸ்எஸ் மோதல்; ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. இது ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து பாஜக சுதந்திரம் பெற்றவிட்ட அறிவிப்பு என்று கூறலாம். நாட்டவே இப்படி கூறி இருக்கிறார் என்றால் அது மோடி – அமித் ஷா அனுமதி இன்றி வந்திருக்காது. இந்த வார்த்தைகளின் விளைவுகளை யோசிக்காமல் நட்டா இதை பேசி இருக்கவே மாட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் நட்டாவை மாற்றுவதோடு பல மாநில தலைவர்களையும் மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் ஆர்எஸ்எஸ் இருக்கிறதாம். செப்டம்பர் மாதத்திற்குள் 10 மாநிலங்களில் தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர். அதற்கு பின் தேசிய தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பருக்குள் இந்த மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள். பாஜகவில் பொதுச் செயலாளர் (அமைப்பு) இரண்டு வருட காலத்திற்கு மேல் நீடிக்க முடியாது என்று எழுதப்படாத விதிகள் கூறுகின்றன. பி.எல். சந்தோஷ், இரண்டு வருட பதவிக் காலங்களை நிறைவு செய்துள்ளார்.

இதனால் அவர் மாற்றப்படுவார். அதோடு மற்ற மாநில தலைவர்கள் மாற்றப்படும் வரை பெரும்பாலும் மாநில பாஜக தலைவர்கள் பலர் எதுவும் வெளியில் பேச மாட்டார்கள். அதிகமாக மீடியாக்களில் பேச வேண்டாம்.. இதுவரை நீங்கள் பேசியதே போதும் என்று பல மாநில தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு உள்ளதாம்.

Leave a Reply