28 in Thiruvananthapuram

முதல் நாளிலேயே.. வச்ச டார்கெட்டை எட்டிப்பிடித்த ராஜா.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய சாதனை

10 months ago
TV Next
100

சென்னை: 2024 தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு உள்ளது.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். நேற்று நடந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன.

 

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று மட்டும் 2 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. டாடா – 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வின்பாஸ்ட் – 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஜே.எஸ்.டபிள்யூ – ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு TVS – 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு பெகட்ரான் – 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு மிட்சுபிஷி – ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு Qualcomm – 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு ஹூண்டாய் – 1,180 கோடி ரூபாய் முதலீடு இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள். சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு, உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதுடன் எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்ன சொன்னார் ? இந்த மாநாட்டிற்கு தலைமையேற்க வந்திருக்கும் மாண்புமிகு ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவர்களை நான் நெஞ்சார வரவேற்கிறேன். மாண்புமிகு திரு. பியுஷ் கோயல் அவர்களது குடும்பம் அரசியல் குடும்பம். அப்பா, அம்மா இரண்டு பேருமே அரசியலில் கோலோச்சியவர்கள். வங்கித் துறை பணியாளராக வாழ்க்கையை தொடங்கி நிதி மற்றும் வர்த்தக துறையில் தனித்துவம் படைத்தவர் மாண்புமிகு திரு. பியுஷ் கோயல் அவர்கள். அவர் இங்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களையும் தொழில் துறை செயலாளர் திரு. அருண்ராய் அவர்களையும் – அனைத்துத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகளையும் அரசு உயர் அலுவலர்களையும் என அனைவரையும் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

Leave a Reply