25 in Thiruvananthapuram

மீண்டும் ஹை டென்ஷனில் மணிப்பூர்.. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? வெளியான ஷாக் தகவல்!

9 months ago
TV Next
78

இம்பால்: மணிப்பூரில் புத்தாண்டு தினமான நேற்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டது யார்? எதற்காக சுட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். கடந்த மே மாதம் முதல் பெரும் வன்முறை ஏற்பட்டது. மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி-குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் 3 மாதங்களை கடந்து நடந்தது. 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறியது.


இரு பிரிவினரிடையே வெடித்த இந்த மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்தனர். பல ஆயிரம் பேர் அண்டை மாநிலத்தில் தஞ்சமடைந்தனர். பிறகு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பதற்றம் ஓரளவு தணிந்தது. எனினும், இதற்கிடையே தான் கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் அவ்வப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

மீண்டும் பதற்றம்: இந்த நிலையில் தான், புத்தாண்டு தினமான நேற்று மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள லிலோங் பகுதியில் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பணம் பறிக்க முயற்சித்ததாகவும் தொடர்ந்து தனது கையில் இருந்த தானியங்கி துப்பாக்கியை வைத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளியதாகவும் இதில் 4 பேர் பலியானதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறினர்.

 

இந்த சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை வெடிக்காமல் இருக்க தவுபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, கக்‌ஷிங் மற்றும் பிஷ்னுபர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் பிரேன் சிங், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply