25 in Thiruvananthapuram

சத்தியனுக்கு சாவில்லை.. பள்ளி பாடபுத்தகத்தில் விஜயகாந்த்.. நா தழுதழுத்த நடிகர் ஜெயம் ரவி

9 months ago
TV Next
97

சென்னை: பள்ளிப் பாடபுத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்த பாடம் இடம் பெற வேண்டும் என நடிகர் ஜெயம்ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருப்பு எம்ஜிஆர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் நடிகர், ஸ்டன்ட் கலைஞர், நகைச்சுவையாளர், அரசியல்வாதி எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதன் என்பதால்தான் இவரை பற்றி கடைக்கோடியில் உள்ள மக்களும் பேசி வருகிறார்கள்.

 

அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நிமோனியா பாதிப்பால் காலமானார். அவருக்கு ஏராளமானோர் தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கினர். இன்றும் அவரை நல்லடக்கம் செய்த தேமுதிக அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவில் பலர் விஜயகாந்த் குறித்து பேசினர். அவற்றில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த் பல்வேறு அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். இதனால் அவர் பட்ட அவமானங்களை பிறர் படக் கூடாது என நினைத்தார். அவர் கொடுப்பது பிறருக்குத் தெரியாது.


எனக்கு அவரிடம் பிடித்ததே அவருடைய கோபம்தான். ஆனால் அதில் நியாயம் இருக்கும் என்றார் கமல்ஹாசன். இதையடுத்து ஜெயம் ரவி பேசினார். அவர் கூறுகையில், எல்லோரும் இறந்த பிறகு சிலரை மட்டும்தான் கடவுள் என சொல்வார்கள். ஆனால் ஒருத்தர்தான் வாழும் போதே கடவுளாக இருந்திருக்கிறார். பள்ளிப் பாடப்புத்தகத்துல நடிகர் விஜயகாந்த் பற்றி வரணும். அவர் சொன்னதைத்தான் நான் சொல்ல நினைக்கிறேன். சத்தியனுக்குச் சாவில்லை என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சிவா பேசுகையில், கேப்டன்தான் என்னை தயாரிப்பாளராக்கினார். நடிகர் சங்கத் தேர்தலில் அவரை ராதாரவியும், வாகை சந்திரசேகரும் போட்டியிட வைத்தார்கள்.


அப்போது நடிகர் சங்கம் கடனில்தான் இருந்தது. இதற்காக மலேசியாவில் நடிகர் சங்க விழாவை நடத்தினார். நிகழ்ச்சி முடிவடைந்ததும் வசூல் குறித்து அங்குள்ள ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அப்போது அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜயகாந்தை ஏமாற்ற நினைத்தார். உடனே கோபமடைந்த விஜயகாந்த், அவருடைய கன்னத்தில் அறைந்து கேட்டதும் அந்த ஏற்பாட்டாளர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு கிடைத்த பெரிய தொகையை வைத்து கடனை அடைத்தார். இப்படி விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்காக ரத்தத்தை சிந்தியிருக்கிறார். இவ்வாறு தயாரிப்பாளர் சிவா தெரிவித்திருந்தார்.

Leave a Reply