22 in Thiruvananthapuram

tamil news

உதயநிதிக்கு பயம்.. கேரவனில் ஒத்திகை பார்த்த விஜய் – ஆதவ் அர்ஜுனா.. கசிந்த தகவலால்.. சிவந்த திமுக

சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர். இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும்...

தடிக்கும் வார்த்தை.. வலுக்கும் மோதல்! நாம் தமிழரை விடாத வருண்குமார்! நேராக உள்துறைக்கே பறந்த புகார்!

சென்னை: சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்பி அருண்குமார் பேசிய பேச்சு, நாம் தமிழர் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக மோதல் விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் வருண்குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் வலுத்திருக்குகிறது. இதற்கிடையே எஸ்பி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின்...

டமில்நடு வேண்டாம்! TAMILNADU ஆங்கில வார்த்தையில் ழ எழுத்தை சேர்க்கணும்! மதுரை கோர்ட்டில் பரபரப்பு!

மதுரை: ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார், இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக ழ எனும் எழுத்து உள்ளது. ஆனால் அரசாணைகளில் STATE GOVERNMENT OF...

1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? கூடிய விரைவில் மீண்டும் ஒரு வாய்ப்பு..

சென்னை: ஒட்டுமொத்த நாட்டிற்கே முன்னோடியாக தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் இது என இந்த திட்டம் குறித்து அரசு பெருமிதம் தெரிவிக்கிறது.   தமிழக அரசு சார்பாக தற்போது இந்த திட்டத்தின் மூலம் 1 .16 கோடி பெண்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெறுகின்றனர். இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் செய்து...

குலம், கோத்திரத்துடன் சர்ச்சையை ஏற்படுத்திய வைகோ பேத்தி திருமண அழைப்பிதழ்! துரை வைகோ விளக்கம்

சென்னை: எனது மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது என துரை வைகோ விளக்கமளித்துள்ளார். திராவிட இயக்கத்தை பின்பற்றும் வைகோ பேத்தியின் திருமண அழைப்பிதழில் குலம், கோத்திரத்துடன் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணனுக்கும் கடந்த 7ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் திருமணம் நடந்தது.   இந்த திருமணத்தில் ஏராளமான...

அடங்கத ஆத்திரம்..லெபனான் மீது கை வைத்த இஸ்ரேல்! தரைவழி தாக்குதலால் நிலைகுலையும் எல்லை! ஐநா கோரிக்கை

பெய்ரூட்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை சீண்டிய நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரபடுத்தி உள்ளது. இந்த நிலையில் தாக்குதல் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதனால் போர் பதற்றம் அங்கு அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல்...