Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!
മലയാളം

விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!

June 05, 2026
1 min read

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த முதலாவது கூட்டத்திலேயே, தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 'வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்' (Vetri Tamizhagam Vision Document) முறைப்படி வெளியிடப்பட்டு, அதில் 436 முக்கிய அம்சங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன.

இதே வேளையில், எதிர்க்கட்சியான திமுக தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் 1998 ஆம் ஆண்டு வெளியான 'புதுமைப்பித்தன்' திரைப்படத்தின் வடிவேலு பிரஸ் மீட் காமெடி வீடியோ காட்சியை பகிர்ந்து, புதிய அரசை கிண்டல் செய்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஒரு மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் வழிகாட்டியாக தொலைநோக்கு ஆவணம் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்ட அறிக்கையானது, உலகப் பொதுமறையான திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 10 முக்கியத் தூண்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், இவை 54 துணைத் தூண்களாக வகைப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்தமாக 436 தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் புதிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

"புதிய அரசில் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய தனித்தனி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த 436 தொலைநோக்கு அறிக்கைகளும், அரசின் 35 துறைகளுக்குக் கீழ் முறைப்படி பிரித்து வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சகமும் இந்த இலக்குகளை எப்படி, எந்தக் காலகட்டத்திற்குள் செயல்படுத்தப் போகிறோம் என்பது குறித்த விரிவான செயல் திட்ட அறிக்கையை (Action Plan) மிக விரைவில் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு அனைத்து விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து போதைப்பொருள் மற்றும் குட்கா புழக்கத்தைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசு தங்களின் 436 திட்டங்களை அறிவித்து பிரஸ் மீட் கொடுத்த சில நிமிடங்களிலேயே, திமுக தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வடிவேலுவின் 'புதுமைப்பித்தன்' பிரஸ் மீட் அரசியல் நையாண்டி வீடியோவைப் பகிர்ந்து அதிரடி ட்ரோல் (Troll) செய்தது. அந்தப் பழைய திரைப்படக் காட்சியில், பத்திரிகையாளர் ஒருவர் "மத்திய அரசுக்குத் தான் அதிக அதிகாரம் இருக்கு, மாநில அரசுக்கு அதிகாரம் கொண்டு வர என்ன செய்யப் போறீங்க?" என்று கேட்கும் சீரியஸான கேள்விக்கு, மிகவும் கான்பிடென்ட்ஸ் ஆக வடிவேலு சொல்லும் பதில் இன்றளவும் பலருக்கு சிரிபூட்டூம். "தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, தற்போது அதை எப்படிச் செயல்படுத்துவது என்று தெரியாமல், துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் விரிவான அறிக்கை கேட்டுத் தவெக அரசு மழுப்புகிறது" என்பதை மறைமுகமாகக் சுட்டிக்காட்டும் விதமாகவே திமுக இந்த மீம்ஸைப் பகிர்ந்துள்ளது.