சென்னை: பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என தமிழக ஆளுநர் பொறுப்பு அர்லேகர் கேள்விக்கு தவெக தலைவர் விஜய் அளித்த பதிலால் ஆளுநர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தற்போதைக்கு விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.
112 பேரின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் 118 பேரின் கடிதங்களை விஜய்யிடம் , ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது. 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என சொல்லப்படுகிறது.