நியூயார்க்: நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் போனில் பேசினார். இதில் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தும் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி.. போரை நிறுத்த ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனையற்ற போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். அதாவது எந்த விதமான கண்டிஷனும் இல்லாமல்.. போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அவர் பல கண்டிஷன்களை போட்டார்.
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார். இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கு இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.
இதற்கு பதிலடி தந்த டிரம்ப், அதிபர் டிரம்ப் – உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.
இப்படி சண்டை உச்சத்திற்கு போன நிலையில்.. 1 வாரம் கழித்து நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் போனில் பேசினார். இதில் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தும் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி.. போரை நிறுத்த ஒப்புக்கொண்டார். அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு போரை நிறுத்த ஒப்புக்கொண்டார். இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா பேசியது. ஆனால் பெரிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டு உக்ரைனுக்கு ஆதரவாக பெரிய ஆக்சன் எதையும் எடுக்கும் திட்டத்தில் உலக நாடுகள் எதுவும் இல்லை.
இதனால் வேறு வழியின்றி அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள உக்ரைன் முடிவு செய்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் வழிக்கு வந்துள்ளார்.